என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஃபிட்னஸ் டிராக்கர்
நீங்கள் தேடியது "ஃபிட்னஸ் டிராக்கர்"
புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ தொடர்ந்து ஹுவாய் நிறுவனம் இரண்டு புதிய ஃபிட்னஸ் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Huawei
ஹுவாய் நிறுவனம் வாட்ச் ஜி.டி. ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் இரண்டு புதிய ஃபிட்னஸ் டிராக்கிங் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் பேண்ட் 3 மற்றும் ஹூவாய் பேண்ட் 3இ என இவை அழைக்கப்படுகின்றன.
ஹூவாய் பேண்ட் 3 மாடலில் 0.95 இன்ச் AMOLED தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெட்டல் ஃபிரேம் ஒன்று டிஸ்ப்ளேவை சுற்றி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சிலிகான் ஸ்டிராப் கொண்டு அணிந்து கொள்ளளலாம்.
இந்த பேண்ட் அப்லோ 3 சிப் மூலம் இயங்குகிறது. இதில் ட்ரூஸ்லீப் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது உறக்கத்தை கண்கானிப்பதோடு, இதனுடன் வழங்கப்பட்டிருக்கும் ஐ.ஆர். எனும் சென்சார் இதயதுடிப்பை டிராக் செய்யும். இந்த பேண்ட் அழைப்புகளுக்கான நோட்டிஃபிகேஷன்களை வழங்குகிறது.
25 கிராம் எடை கொண்டிருக்கும் ஹூவாய் பேண்ட் 3 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இது 50 மீட்டர் வரையிலான தண்ணீரிலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஹூவாய் பேண்ட் 3இ அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கிறது. இதில் புதிதாக ஃபுட்வியர் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டப்பயிற்சியின் போது 97 சதவிகிதம் வரை சரியான விவரங்களை வழங்குகிறது. இதற்கென 6-ஆக்சிஸ் கைரோஸ்கோப் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் 50 மீட்டர் வரையிலான வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் பேண்ட் 3இ ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கும், ஸ்டான்ட்பை மோடில் 21 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என ஹூவாய் தெரிவித்துள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதன் பின் வெளியான இயங்குதளங்களிலும், ஐ.ஓ.எஸ். 9.0 மற்றும் அதன்பின் வெளியான பதிப்புகளை கொண்ட சாதனங்களில் சப்போர்ட் செய்யும்.
இந்தியாவில் ஹூவாய் பேண்ட் 3 விலை ரூ.4,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 26 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் ஹூவாய் பேண்ட் 3 கிடைக்கிறது. இது அப்சிடியன் பிளாக் மற்றும் ஸ்பேஸ் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஹூவாய் பேண்ட் 3இ மாடலின் விலை ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பின்க் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
லெனோவோ நிறுவனத்தின் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி கொண்ட ஸ்மார்ட் பேன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Lenovo
லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பேன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவோ HX03W கார்டியோ பிளஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட் பேன்ட் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, 0.96 இன்ச் OLED ஸ்கிரீன் கொண்டுள்ளது.
புதிய ஸ்மார்ட் பேன்ட் உடன் மேம்படுத்தப்பட்ட லெனோவோ லைஃப் ஃபிட்னஸ் ஆப் வழங்கப்படுகிறது. இந்த செயலியில் உணவு கட்டுப்பாடு குறித்த விவரம், உடற்பயிற்சி மற்றும் தனிப்பட்ட விளையாட்டுக்கள் சார்ந்த பரிந்துரை உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த செயலியில் ரியல் டைம் டிராக்கர் இருப்பதால், பிழைகளை சரி செய்து நடவடிக்கைகளுக்கான முடிவுகளை பகிர்ந்து கொள்ள முடியும்.
லெனோவோ HX03W கார்டியோ பிளஸ் சிறப்பம்சங்கள்
- 0.96 இன்ச் 128x32 பிக்சல் OLED டிஸ்ப்ளே
- இதய துடிப்பு, நடை, தூரம், உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள், உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்யும்
- கால் ரிமைன்டர்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன், சைலன்ட் அலாரம்
- ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் டிராக்கர், கைரோ சென்சார், வைப்ரேஷன் மோட்டார்
- வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP68)
- ப்ளூடூத்
- ஆன்ட்ராய்டு 4.4 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களில் வேலை செய்யும்
- பத்து நாட்கள் வரையிலான பேட்டரி
லெனோவோ HX03W கார்டியோ பிளஸ் ஃபிட்னஸ் பேன்ட் பிளாக், ரெட் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட் பேன்ட் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐ.டி.சி. வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கையின் படி இந்தியாவின் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தை வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Xiaomi
சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில், 2018 இரண்டாவது காலாண்டில் இந்திய அணியக்கூடிய சாதனங்கள் சந்தை வளர்ச்சியடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அணியக்கூடிய சந்தை முந்தைய வருடத்தை விட 66% மற்றும் 40% அதிகரித்துள்ளது.
இதே அறிக்கையில் 2018 இரண்டாவது காலாண்டில் பத்து லட்சம் அணியக்கூடிய சாதனங்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் மூன்று நிறுவனங்கள் தங்களது இடத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.
ரிஸ்ட்பேன்ட்களை பொருத்த வரை இந்த காலாண்டில் 90% விற்பனையாகி இருக்கிறது. அணியக்கூடிய கம்ப்யூட்டிங் சாதனங்கள் 34% வளர்ச்சியடைந்துள்ளது.
நிறுவனங்களை பொருத்த வரை அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் சியோமி நிறுவனம் 45.8% பங்குகளை பெற்றிருக்கிறது. இது முந்தைய காலாண்டை விட 31% அதிகம் ஆகும். கோகி 74% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. விற்பனையில் 36% வளர்ச்சி பதிவு செய்துள்ளது.
மூன்றாவது இடம் டைட்டன் பெற்றிருக்கிறது. டைட்டனின் ஃபாஸ்ட்டிராக் ரிஃப்ளெக்ஸ் ஒட்டுமொத்த விற்பனையில் 56% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, ஃபிட்பிட் நிறுவனம் நான்காவது நிறுவனமாக இறுக்கிறது. லெனோவோ மூன்று காலாண்டுகளுக்கு பின் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் கார்மின் நிறுவனத்தின் விவோஆக்டிவ் 3 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்களை பார்ப்போம். #garmin
கார்மின் நிறுவனத்தின் விவோஆக்டிவ் 3 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மியூசிக் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் அதிகபட்சம் 500 பாடல்களை பிரபல மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களில் இருந்து டவுன்லோடு செய்ய முடியும்.
விவோஆக்டிவ் 3 அறிமுகம் செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட ஃபிட்னஸ் அம்சம், கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் உள்ளிட்டவை புதிய சாதனத்திலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
கார்மின் விவோஆக்டிவ் 3 சிறப்பம்சங்கள்:
- 1.2 இன்ச் 240x240 பிக்சல் ஃபுல்-கலர் கார்மின் க்ரோமா டிஸ்ப்ளே
- வாட்டர் ரெசிஸ்டன்ட் (5 ATM)
- ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனுடன் வேலை செய்யும்
- ஸ்டெப் கவுன்ட்டர், மூவ் பார்
- ஆட்டோ கோல்
- ஸ்லீப் மானிட்டரிங், கலோரி உள்ளிட்ட உடல் அசைவுகளை டிராக் செய்யும் வசதி
- மியூசிக் ஸ்டோரேஜ்: அதிகபட்சம் 500 பாடல்களை பதிவு செய்யும் வசதி
- பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட ஜிபிஎஸ் மற்றும் 15 ஸ்போர்ட் செயலிகள்
- கார்மின் எலிவேட் ரிஸ்ட் இதய துடிப்பு மானிட்டர்
- பாரோமெட்ரிக் ஆல்டிமீட்டர், காம்பஸ், தெர்மோமீட்டர்
ஸ்மார்ட்வாட்ச் மோடில் ஏழு நாட்கள் பேக்கப் வழங்குவதோடு, ஜிபிஎஸ் மற்றும் மியூசிக் மோடில் 5 மணி நேர பேக்கப், மியூசிக் இல்லாமல் ஜிபிஎஸ் மோடில் 13 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இந்தியாவில் விவோஆக்டிவ் 3 மியூசிக் விலை ரூ.25,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவோஆக்டிவ் 3 மியூசிக் பிளாக் சிலிகான் 20மில்லிமீட்டர் பேண்ட் உடன் வருகிறது. கார்மின்ஸ்டோர், பேடிஎம் மால், அமேசான், ப்ளிப்கார்ட், ஹீலியோஸ் வாட்ச் ஸ்டோர் மற்றும் பல்வேறு விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. #garmin #Smartwatch
கோகி நிறுவனத்தின் வைட்டல் ஃபிட்னஸ் பேன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #FitnessGoals
கோகி நிறுவனத்தின் வைட்டன் ஃபிட்னஸ் பேன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை பில்ட்-இன் அம்சங்களாக வழங்கப்பட்டு இருக்கும் புதிய ஃபிட்னஸ் சாதனத்தில் OLED தொடுதிரை வசதி, ரத்த அழுத்த மானிட்டர், இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் கோகி பிளே அம்சம் மூலம் வீடியோக்களை நேரலையில் கோகி ஆப் மூலம் ஸ்ட்ரீம் செய்ய முடியும். புதிய வைட்டல் ஃபிட்னஸ் பேன்ட் வாங்குவோருக்கு மூன்று மாதங்களுக்கு இலவச ஆலோசனை வழங்கப்படும் என கோகி நிறுவனம் அறிவித்துள்ளது.
கோகி வைட்டல் பேன்ட் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு போன்றவற்றை டிராக் செய்ய முடியும் என்பதோடு இதில் வழங்கப்பட்டு இருக்கும் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே தினமும் நீங்கள் நடக்கும் தூரம், உடலில் எரிக்கப்பட்ட கலோரிகளினஎ் அளவு மற்றும் உறக்கம் சார்ந்த முழு விவரங்களை விரிவாக வழங்குகிறது.
இதன் ஸ்போர்ட்ஸ் மோட் நீங்கள் ஓட்ட பயிற்சி, உடற்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டும் போதும் உதவிகரமாக இருக்கிறது. மொபைல் போன் நோட்டிஃபிகேஷன்கள், அலாரம் செட் செய்வது போன்ற அம்சங்களை கோகி வைட்டல் பேன்ட் வழங்குகிறது. இத்துடன் பில்ட்-இன் மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டுக்கு ஏற்ப கோகி வைட்டல் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் இதில் வாட்டர் ப்ரூஃப் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஃபிட்னஸ் பேன்ட் சாதனத்துடன் கோகி பிளே எனும் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோகி பிளே அம்சம் மூலம் வல்லுநர்கள், மருத்துவர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள், சுகாதார ஆலோசகர்களின் வீடியோக்களை கோகி ஆப் மூலம் பார்க்க முடியும். ஒவ்வொரு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நேரலை வீடியோக்களை ஒலிபரப்ப திட்டமிடப்பட்டு இருப்பதாக கோகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோகி வைட்டல் ஃபிட்னஸ் பேன்ட் விலை ரூ.3,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 16-ம் தேதி முதல் பயனர்கள் கோகி ஃபிட்னஸ் பேன்ட் சாதனத்தை அமேசான் வலைதளம் மற்றும் கோகி ஹெல்த் ஸ்டோரில் வாங்கிட முடியும்.
லெனோவோ நிறுவனத்தின் HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
லெனோவோ நிறுவனம் HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன் லெனோவோ நிறுவனத்தின் HX03 கார்டியோ மற்றும் HX03F ஸ்பெக்ட்ரா பேன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் OLED மோனோக்ரோம் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
இந்த டிஸ்ப்ளே ஆக்டிவிட்டி, நேரம், தேதி மற்றும் பல்வேறு தகவல்களை வழங்குகிறது. இதில் இதய துடிப்பு சென்சார் வழங்கப்படாத நிலையில், 60 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 8 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய HX06, பில்ட்-இன் ஸ்டான்டர்டு யுஎஸ்பி போர்ட் கொண்டிருக்கிறது.
இதை கொண்டு நேரடியாக கம்ப்யூட்டர் அல்லது யூஎஸ்பி சார்ஜர் மூலம் மிக எளிமையாக சார்ஜ் செய்ய முடியும். இதற்கு எவ்வித கூடுதல் கேபிள்களும் தேவைப்படாது.
லெனோவோ HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சிறப்பம்சங்கள்:
- 0.87 இன்ச் 128x32 பிக்சல் OLED டிஸ்ப்ளே
- ஸ்டெப்கள், தூரம், எரிக்கப்பட்ட கலோரிக்கள், உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்யும்
- அழைப்பு ரிமைன்டர்கள், நோட்டிஃபிகேஷன்கள்
- இன்ஃபர்மேஷன் ரிமைன்டர், சைலன்ட் அலாரம்
- கைரோ சென்சார், வைப்ரேஷன் மோட்டார்
- வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP67)
- எடை: 20 கிராம்
- ப்ளூடூத் 4.2 LE
- ஆன்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்கும் புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும்
- ஐஓஎஸ் 8.0 மற்றும் அதற்கும் புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும்
- 60 எம்ஏஹெச் பேட்டரி
லெனோவோ HX06 ஸ்மார்ட்பேன்ட் கருப்பு நிறம் கொண்டிருப்பதோடு, மாற்றக்கூடிய ரிஸ்ட் ஸ்டிராப்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் லெனோவோ HX06 ஸ்மார்ட்பேன்ட் விலை ரூ.1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்மார்ட் சாதனங்களின் புரட்சி உங்களது வாழ்க்கை முறையை தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது.
நமது அன்றாட வாழ்வில் நமக்கு தேவையான பல்வேறு அவசர தகவல்களில் துவங்கி, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் தீர்வு வழங்கும் அசாத்திய பணிகளை நமது கையடக்க சாதனங்கள் மிக சுலபமாக செய்து முடிக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட்போன் செய்யும் பணிகளில் பாதியை ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர் போன்ற சாதனங்கள் பறித்துக் கொள்கின்றன.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், சவுண்ட் சிஸ்டம்கள், மொபைல் மற்றும் இதர மின்சாதனங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக ஜெப்ரானிக்ஸ் இருக்கிறது. இந்நிறுவனம் கையில் அணியக்கூடிய பொருட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் 'ஸ்மார்ட் டைம் 200' என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்மார்ட்போனினை ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்துடன் இணைந்து கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் இன்பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை க்ளிக் செய்து வாட்ச் மூலம் பேசலாம். இதன் இன்பில்ட் ஸ்பீக்கர் பயனருக்கு வசதியாக இருக்கும் படி தேவையான அளவு ஒலியெழுப்புகிறது.
அழைப்புகள் சார்ந்த விவரம் மட்டுமின்றி எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் பல்வேறு சேவைகளுக்கான நோட்டிஃபிகேஷன்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் பீடோமீட்டர் அம்சம் நீங்கள் எத்தனை தூரம் நடந்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை வழங்கும். இத்துடன் உங்களது உறக்கம் சார்ந்த விவரங்களையும் டிராக் செய்து வழங்குகிறது.
ஸ்மார்ட் டைம் 200 சிறப்பம்சங்கள்:
- 2.71 செ.மீ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
- நானோ சிம் ஸ்லாட் வசதி
- மைக்ரோ SD கார்டு ஸ்லாட்
- BT வயர்லெஸ் வசதி
- தொடு திரை வசதி
- இன்-பில்ட் ஸ்பீக்கர் & மைக் கொண்டது
- பீடோமீட்டர் மற்றும் ஸ்லீப் மானிட்டர்
- முன்பக்க கேமரா
ஸ்மார்ட் டைம் 200 சாதனத்தில் மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்க மைக்ரோ SD கார்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. 380 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்மார்ட் டைம் 200 வட்டவடிவத்தில் 2.71 சென்டிமீட்டர் அளவில் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
இத்துடன் மைக்ரோ சிம் / நானோ சிம் ஸ்லாட் வழங்கப்பட்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை ஒரு முழுமையான தனி சாதனமாகவும் பயன்படுத்த முடியும். இன்-பில்ட் ஸ்பீக்கர், முன்பக்க கேமரா, சவுண்ட் ரெகார்டர், பிரவுசர், ஃபைல் மேனேஜர் மற்றும் பல்வேறு அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்டிருக்கும் ஸ்மார்ட் டைம் 200 உங்களின் பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் இருக்கிறது.
இந்தியாவில் ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட் டைம் 200 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செவ்வகம் மற்றும் வட்ட வடிவம் கொண்ட ஸ்மார்ட் டைம் 200 சாதனத்தை இந்தியாவின் முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி விரைவில் Mi பேன்ட் 3 சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீஜிங்:
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி விரைவில் Mi பேன்ட் ஃபிட்னஸ் டிராக்கரின் மூன்றாம் தலைமுறை மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழாவில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டுள்ளது.
ஷென்சென் நகரில் நடைபெற இருக்கும் விழாவுக்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அனுப்பப்படுகின்றன. முன்னதாக வெளியான தகவல்களில் Mi பேன்ட் 3 சாதனம் இம்மாத இறுதியில் வெளியிடப்படலாம் என கூறப்பட்ட நிலையில் ஆண்டு விழா நிகழ்வில் புதிய ஃபிட்னஸ் டிராக்கர் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய Mi பேன்ட் 3 சாதனத்தில் தொடுதிரை டிஸ்ப்ளே வழங்கப்பட்டு, பட்டன்கள் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்களை சியோமி மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது. எனினும் Mi பேன்ட் 3 டீசர் அந்நிறுவன ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
2018 சியோமி ஸ்மார்ட்போனுடன் சியோமி நிறுவனம் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் துவங்க இருக்கும் சியோமி விழாவுக்கான நுழைவு சீட்டுக்களை அந்நிறுவனம் 799 முதல் 1999 யுவான் வரை கட்டணம் வசூலித்து வருகிறது. விழாவில் மொத்தம் 5000 பேர் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன விழாவை தொடர்ந்து ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் சியோமியின் Mi கிரவுட்ஃபன்டிங் திட்டத்தின் கீழ் உருவான முதற்கட்ட சாதனங்களை வெளியிட்டது. அதன் படி Mi ப்ளூடூத் ஆடியோ ரிசீவர் மற்றும் செல்ஃபி ஸ்டிக் டிரைபாட் உள்ளிட்ட சாதனங்களை வெளியிட்டது. ப்ளூடூத் ஆடியோ ரிசீவர் விலை ரூ.999 மற்றும் செல்ஃபி ஸ்டிக் டிரைபாட் விலை ரூ.1,099 என விலை நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X